004-1-04-வாய்ப்பை விட்டுவிடாதே!
அடுத்த நாள் — ஆசிரியர் இல்லாததால் பள்ளியில் ஒரே பேச்சு சத்தம்…
ஏதோ ஒரு அழைப்பிதல் கட்டை எடுத்து வந்த office attender மாணிக்கம், “நீங்கள் எல்லாம் பெரிய பசங்க …. நீங்களே இப்படி சத்தம் போட்டா எப்படி?”
"இன்று விளையாட்டு period இல்ல!" என்று சொன்னார்.
"ஏன்?" என்று நாகேந்திரன் கேட்டான்
"அபி அய்யா இந்தியா போயிருக்காங்க… அவருக்கு பதிலா வரவேண்டிய PET சாருக்கு உடம்பு சரியில்லை…"
மாணவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்தனர்…
ஆனால் நல்லதம்பி மட்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்…
இரண்டு காக்கைகள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன - அவை இரண்டும் முன்னர் நட்பாக இருந்தவை…. ஏன் ? என்ன ஆயிற்று இந்த காக்கைகளுக்கு?...
அப்போது கதவு திறந்தது.
தலைமை ஆசிரியர் பெஞ்சமின் உள்ளே நடந்து வந்தார் — கையில் ஒரு வண்ணமயமான அழைப்பிதழுடன்.
"எல்லாரும் இங்க கவனிங்க!"
வகுப்பறை உடனே அமைதியானது. பெஞ்சமின் சார் வந்தால் சிரிப்பும் நிற்கும், சத்தமும் நிற்கும் — அது அவருக்கு இருக்கும் ஒரு தனி சக்தி.
"5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயம். Young International Visionary Leaders Circle — சுருக்கமாக YIVLC — என்ற உலக அளவில் இயங்கும் ஒரு அமைப்புக்கான அழைப்பிதழ் என்னிடம் இருக்கிறது. எல்லாரும் வீட்டுக்கு சென்று, அம்மா அப்பாவிடம் கேட்டு அதில் உறுப்பினராக சேருங்கள்!"
வகுப்பறையில் முணுமுணுப்பு ஆரம்பித்தது.
நல்லதம்பி கை தூக்கினான்.
"சார்… அது எதற்காக? என்ன செய்வோம் அதில்?"
பெஞ்சமின் சார் புன்னகைத்தார். "நல்ல கேள்வி!"
"YIVLC என்பது உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து சிந்தனை செய்து, தலைமையேற்று, நல்ல மாற்றத்தை உருவாக்கும் ஒரு சிறப்பு மாணவர் வட்டம். இது சாதாரண club அல்ல — இது future leaders உருவாகும் platform!"
"Brazil-ல் இருக்கும் மாணவனும், India-ல் இருக்கும் மாணவியும், இங்கே சாட்டநூகாவில் இருக்கும் நீங்களும் — எல்லாரும் ஒரே குடும்பம். Young Minds. Global Vision. Future Leaders."
லட்சுமி கண்கள் மின்னின. நாகேந்திரன் கை தூக்கினான்.
"சார்…"
பெஞ்சமின் சார் திரும்பினார்.
நாகேந்திரன் நேராக நின்றான் — தன் வழக்கமான தன்னம்பிக்கையுடன்:
"இது கண்டிப்பாக சேர வேண்டியது இல்லை — அதனால் எங்களுக்கு வேண்டாம் அய்யா. ஏற்கனவே சிலர் Scouts-ல் இருக்கிறோம். படிப்பதற்கே ரொம்ப இருக்கிறது!"
சில மாணவர்கள் தலையாட்டினர். "ஆமாம் ஆமாம்" என்று இரண்டு பேர் சேர்ந்துகொண்டனர்.
நல்லதம்பி உடனே எழுந்தான்.
"நாகேந்திரா! நீ சேராம விடு — ஆனால் என்ன என்று தெரியாம அனைவருக்கும் வேண்டாம் என்று சொல்லாதே!"
நாகேந்திரன் புருவம் உயர்த்தினான். "அது என்ன — நீ என்ன சொல்ல வருகிறாய்?"
"நேத்து எங்கம்மா சொன்னாங்கள் — ஈவது விலக்கேல்-ன்னு. ஒருத்தர் கொடுக்கிறதையோ, ஒரு வாய்ப்பையோ தடுக்காதே — அது தவறு!"
வகுப்பறை அமைதியானது.
நாகேந்திரன் ஒரு நொடி நல்லதம்பியை பார்த்தான். பிறகு — வாயை திறந்தான்:
"சரி சரி… நீ போய் சேர்ந்துக்கோ. நான் வேண்டாம்!"
"அது உன் விருப்பம்" என்று நல்லதம்பி அமர்ந்தான்.
பெஞ்சமின் சார் இரண்டு பேரையும் பார்த்து புன்னகைத்தார் — இந்த இரண்டு பையன்களும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள் என்று மனதில் நினைத்தார்.
"வீட்டில் கேட்டுவிட்டு சேருங்கள். நாளை சனிக்கிழமை என் மகன் ஜான்சன் நியூ யார்க்-லிருந்து வருகிறான். அவனும் சிறு வயதில் இருந்தே இதில் உறுப்பினராக இருக்கிறான் — உலக அளவில் அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் சந்தேகங்களை அவனிடம் கேட்டு தெளிவு பெறலாம்!"
லட்சுமி கையை தூக்கினாள்: "சார்… ஜான்சன் சார் என்ன வேலை செய்கிறார்?"
"Doctor. California-வில் இருக்கிறான். நோய் ஆராய்ச்சி செய்கிறான்."
நல்லதம்பி மனதில் ஏதோ தோன்றியது — Doctor… நோய் ஆராய்ச்சி… உலகம் முழுவதும் நண்பர்கள்… ஏதோ ஒரு பெரிய திட்டம் அவனுக்காக காத்திருப்பது போல் தோன்றியது. மயிலானை இருந்தால் அதுக்கு இதைப்பற்றி தெரியுமா என கேட்கலாம் என தோன்றியது.
வீட்டில் — அன்று மாலை
வீடு திரும்பும் நல்லதம்பிக்கு மயிலானை நினைப்பாகவே இருந்தது.
காக்கைகள் சண்டை ஏன் போட்டன? நாகேந்திரன் திரையரங்கில் புறா கோவமாக கொத்தியது பற்றி சொன்னது ஞாபகம் வந்தது. ஏதோ நடக்கிறது என்னவென்று தெரியவில்லை …மயிலானை இருந்தால் கேட்கலாம் ….
"மயிலானை… உண்மையிலேயே மீண்டும் வருமா?" என்று மனதில் கேட்டுக்கொண்டான்…
"மயிலானை திரும்ப வருமா… இல்லை வராதா?"
யோசித்தான். யோசித்தான். யோசித்தான்.
கடைசியில் — பரிசோதிக்கவே செய்வோம்! என்று முடிவு செய்தான்.
தோட்டத்தில் நின்றான். கண்களை மூடினான். ஆழமாக மூச்சு இழுத்தான்.
"மயிலானை வா! மயிலானை வா!! "நல்லதம்பி அழைக்கிறேன் — மயிலானை வா!!!"
திடீரென்று — காற்று அசைந்தது. இலைகள் சலசலத்தன.
படர்ர்ர்!
ஒரு வண்ண மேகம் போல் ஏதோ பறந்து வந்தது — நேரே நல்லதம்பியின் தோளில் உட்கார்ந்தது!
மயிலானை!
நல்லதம்பி மூச்சே விடாமல் நின்றான்.
வந்தது! உண்மையிலேயே வந்தது!!
அப்போது உள்ளிருந்து பப்பு ஓடி வந்தது — மயிலானையை பார்த்தது — வாலை ஆட்டியது — குஊஊஊ என்று குரைக்காமல் அன்புடன் முனகியது — மயிலானையை வரவேற்பது போல்!
நல்லதம்பி கண்களில் நீர் வந்தது.
"நீ வந்தே விட்டாய்!" என்று மெல்ல சொன்னான்.
மயிலானை அவன் தோளில் தலை வைத்து அமைதியாக இருந்தது.
முந்தைய கேள்விக்கு விடை
கேள்வி: Calculator-ல் நாம் கணக்கை சேமித்து வைத்துக்கொள்ள எந்த பொத்தானை (button) பயன்படுத்துவோம்?
(C) M+ ✅
விளக்கம்: M+ என்பது Memory Plus என்று அர்த்தம். இந்த பொத்தானை அழுத்தினால் calculator திரையில் இருக்கும் கணக்கை நினைவகத்தில் (memory) சேமித்து வைக்கும். பின்னர் MR (Memory Recall) பொத்தானை அழுத்தினால் அந்த கணக்கை மீண்டும் பெறலாம்!
இந்தக் கதைக்கான கேள்வி
கீழே உள்ளதைப் பற்றி தெரியுமா ?
Lions Clubs International
Rotary International
Scouts
Junior Chamber International
National Cadet Corps
Red Cross
No comments:
Post a Comment