Tuesday, May 12, 2026

004-1-04-வாய்ப்பை விட்டுவிடாதே!

 

004-1-04-வாய்ப்பை விட்டுவிடாதே!

அடுத்த நாள் — ஆசிரியர் இல்லாததால் பள்ளியில் ஒரே பேச்சு  சத்தம்…

ஏதோ ஒரு அழைப்பிதல் கட்டை எடுத்து வந்த office attender மாணிக்கம், “நீங்கள் எல்லாம் பெரிய பசங்க …. நீங்களே இப்படி சத்தம் போட்டா எப்படி?”  

"இன்று விளையாட்டு period இல்ல!" என்று சொன்னார்.

"ஏன்?" என்று நாகேந்திரன்  கேட்டான் 

"அபி அய்யா இந்தியா போயிருக்காங்க… அவருக்கு பதிலா வரவேண்டிய PET சாருக்கு உடம்பு சரியில்லை…"

மாணவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்தனர்…

ஆனால் நல்லதம்பி மட்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்…

இரண்டு காக்கைகள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன - அவை இரண்டும் முன்னர் நட்பாக இருந்தவை…. ஏன் ? என்ன ஆயிற்று இந்த காக்கைகளுக்கு?...

அப்போது கதவு திறந்தது.

தலைமை ஆசிரியர் பெஞ்சமின் உள்ளே நடந்து வந்தார் — கையில் ஒரு வண்ணமயமான அழைப்பிதழுடன்.

"எல்லாரும் இங்க கவனிங்க!"

வகுப்பறை உடனே அமைதியானது. பெஞ்சமின் சார் வந்தால் சிரிப்பும் நிற்கும், சத்தமும் நிற்கும் — அது அவருக்கு இருக்கும் ஒரு தனி சக்தி.

"5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயம். Young International Visionary Leaders Circle — சுருக்கமாக YIVLC — என்ற உலக அளவில் இயங்கும் ஒரு அமைப்புக்கான அழைப்பிதழ் என்னிடம் இருக்கிறது. எல்லாரும் வீட்டுக்கு சென்று, அம்மா அப்பாவிடம் கேட்டு அதில் உறுப்பினராக சேருங்கள்!"


வகுப்பறையில் முணுமுணுப்பு ஆரம்பித்தது.

நல்லதம்பி கை தூக்கினான்.

"சார்… அது எதற்காக? என்ன செய்வோம் அதில்?"

பெஞ்சமின் சார் புன்னகைத்தார். "நல்ல கேள்வி!"

"YIVLC என்பது உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து சிந்தனை செய்து, தலைமையேற்று, நல்ல மாற்றத்தை உருவாக்கும் ஒரு சிறப்பு மாணவர் வட்டம். இது சாதாரண club அல்ல — இது future leaders உருவாகும் platform!"

"Brazil-ல் இருக்கும் மாணவனும், India-ல் இருக்கும் மாணவியும், இங்கே சாட்டநூகாவில் இருக்கும் நீங்களும் — எல்லாரும் ஒரே குடும்பம். Young Minds. Global Vision. Future Leaders."

லட்சுமி கண்கள் மின்னின. நாகேந்திரன் கை தூக்கினான்.

"சார்…"

பெஞ்சமின் சார் திரும்பினார்.

நாகேந்திரன் நேராக நின்றான் — தன் வழக்கமான தன்னம்பிக்கையுடன்:

"இது கண்டிப்பாக சேர வேண்டியது இல்லை — அதனால் எங்களுக்கு வேண்டாம் அய்யா. ஏற்கனவே சிலர் Scouts-ல் இருக்கிறோம்.  படிப்பதற்கே ரொம்ப இருக்கிறது!"

சில மாணவர்கள் தலையாட்டினர். "ஆமாம் ஆமாம்" என்று இரண்டு பேர் சேர்ந்துகொண்டனர்.

நல்லதம்பி உடனே எழுந்தான்.

"நாகேந்திரா! நீ சேராம விடு — ஆனால் என்ன என்று தெரியாம அனைவருக்கும் வேண்டாம் என்று சொல்லாதே!"

நாகேந்திரன் புருவம் உயர்த்தினான். "அது என்ன — நீ என்ன சொல்ல வருகிறாய்?"

"நேத்து எங்கம்மா சொன்னாங்கள் — ஈவது விலக்கேல்-ன்னு. ஒருத்தர் கொடுக்கிறதையோ, ஒரு வாய்ப்பையோ தடுக்காதே — அது தவறு!"

வகுப்பறை அமைதியானது.

நாகேந்திரன் ஒரு நொடி நல்லதம்பியை பார்த்தான். பிறகு — வாயை திறந்தான்:

"சரி சரி… நீ போய் சேர்ந்துக்கோ. நான் வேண்டாம்!"

"அது உன் விருப்பம்" என்று நல்லதம்பி அமர்ந்தான்.

பெஞ்சமின் சார் இரண்டு பேரையும் பார்த்து புன்னகைத்தார் — இந்த இரண்டு பையன்களும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள் என்று மனதில் நினைத்தார்.

"வீட்டில் கேட்டுவிட்டு சேருங்கள். நாளை சனிக்கிழமை என் மகன் ஜான்சன் நியூ யார்க்-லிருந்து வருகிறான். அவனும் சிறு வயதில் இருந்தே இதில் உறுப்பினராக இருக்கிறான் — உலக அளவில் அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் சந்தேகங்களை அவனிடம் கேட்டு தெளிவு பெறலாம்!"

லட்சுமி கையை தூக்கினாள்: "சார்… ஜான்சன் சார் என்ன வேலை செய்கிறார்?"

"Doctor. California-வில் இருக்கிறான். நோய் ஆராய்ச்சி செய்கிறான்."

நல்லதம்பி மனதில் ஏதோ தோன்றியது — Doctor… நோய் ஆராய்ச்சி… உலகம் முழுவதும் நண்பர்கள்… ஏதோ ஒரு பெரிய திட்டம் அவனுக்காக காத்திருப்பது போல் தோன்றியது.  மயிலானை இருந்தால் அதுக்கு இதைப்பற்றி தெரியுமா என கேட்கலாம்  என தோன்றியது.


வீட்டில் — அன்று மாலை

வீடு திரும்பும் நல்லதம்பிக்கு மயிலானை நினைப்பாகவே இருந்தது.

காக்கைகள் சண்டை ஏன் போட்டன? நாகேந்திரன் திரையரங்கில் புறா கோவமாக கொத்தியது பற்றி சொன்னது  ஞாபகம் வந்தது.  ஏதோ நடக்கிறது என்னவென்று தெரியவில்லை …மயிலானை இருந்தால் கேட்கலாம் ….

"மயிலானை… உண்மையிலேயே மீண்டும் வருமா?" என்று மனதில் கேட்டுக்கொண்டான்…

"மயிலானை திரும்ப வருமா… இல்லை வராதா?"

யோசித்தான். யோசித்தான். யோசித்தான்.

கடைசியில் — பரிசோதிக்கவே செய்வோம்! என்று முடிவு செய்தான்.

தோட்டத்தில் நின்றான். கண்களை மூடினான். ஆழமாக மூச்சு இழுத்தான்.

"மயிலானை வா! மயிலானை வா!! "நல்லதம்பி அழைக்கிறேன் — மயிலானை வா!!!"

திடீரென்று — காற்று அசைந்தது. இலைகள் சலசலத்தன.

படர்ர்ர்!

ஒரு வண்ண மேகம் போல் ஏதோ பறந்து வந்தது — நேரே நல்லதம்பியின் தோளில் உட்கார்ந்தது!

மயிலானை!

நல்லதம்பி மூச்சே விடாமல் நின்றான்.

வந்தது! உண்மையிலேயே வந்தது!!

அப்போது உள்ளிருந்து பப்பு ஓடி வந்தது — மயிலானையை பார்த்தது — வாலை ஆட்டியது — குஊஊஊ என்று குரைக்காமல் அன்புடன் முனகியது — மயிலானையை வரவேற்பது போல்!

நல்லதம்பி கண்களில் நீர் வந்தது.

"நீ வந்தே விட்டாய்!" என்று மெல்ல சொன்னான்.

மயிலானை அவன் தோளில் தலை வைத்து அமைதியாக இருந்தது.


முந்தைய கேள்விக்கு விடை

கேள்வி: Calculator-ல் நாம் கணக்கை சேமித்து வைத்துக்கொள்ள எந்த பொத்தானை (button) பயன்படுத்துவோம்?

(C) M+

விளக்கம்: M+ என்பது Memory Plus என்று அர்த்தம். இந்த பொத்தானை அழுத்தினால் calculator திரையில் இருக்கும் கணக்கை நினைவகத்தில் (memory) சேமித்து வைக்கும். பின்னர் MR (Memory Recall) பொத்தானை அழுத்தினால் அந்த கணக்கை மீண்டும் பெறலாம்!


இந்தக் கதைக்கான கேள்வி

கீழே உள்ளதைப் பற்றி தெரியுமா ?

Lions Clubs International

Rotary International

Scouts

Junior Chamber International

National Cadet Corps

Red Cross



அகராதி (Dictionary)

சொல்

விளக்கம்

ஈவது

கொடுப்பது, தானம் செய்வது

விலக்கேல்

தடுக்காதே, தவிர்க்காதே

உறுப்பினர்

Member — ஒரு அமைப்பில் சேர்ந்தவர்

தலைமை

Leadership — முன்னின்று வழிகாட்டுவது

அமைப்பு

Organization — ஒரே நோக்கத்துடன் சேர்ந்த குழு

சந்தேகம்

Doubt — தெளிவில்லாத கேள்வி

பரிசோதிக்க

To test — சோதித்துப் பார்க்க




4 ஈவது விலக்கேல்.

ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே


Friday, May 1, 2026

003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை

 

003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை 

(இயல்வது கரவேல்)


இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நாள்.  


நாகேந்திரனின்  அம்மா அவனுக்கு பள்ளிக்கு  தேவையான அனைத்தையும் எடுக்க உதவினார்.


நாகேந்திரனின் அம்மா:- நாகேந்திரா, இன்னொரு கால்குலேட்டர் எடுத்துக்கோ திடீர்னு வேலை பாக்காம போச்சன்னா  என்ன பண்ணுவ?


நாகேந்திரன் எண்ணமோ  இன்னும் நேற்று லட்சுமி சொன்ன மயிலானையே  மனதில் ஓடியது.  நல்லதம்பி மயிலானையை பள்ளிக்கு கூட்டிக் கொண்டு வருவானா  என்று தெரியாது எனவே வேகமாக நல்லதம்பி  வீட்டிற்கு சென்று பார்க்க நினைத்தான். 


அப்படி யோசித்துக் கொண்டு இருந்த நாகேந்திரன், அம்மாவிடம், ஒன்னும் பிரச்சன இல்லை  கால்குலேட்டர் ஈஸியா போகாது நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்


நாகேந்திரனின் அப்பா :  நீ கார்ல போய் ஸ்கூல்ல இறங்கிட்டு கார அனுப்பி விடு நானும் அம்மாவும்  அப்புறம் ஆபீஸ் போறோம்  என்றார்


நாகேந்திரன் லட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டு,  கார் ஓட்டுநர் மணிகண்டன் அவர்களிடம் ஓகே டிரைவர், நான் பள்ளிக்கு லட்சுமி கூட போய்க்கிறேன் - நீங்க கிளம்புங்க என்றான். 


லட்சுமி பள்ளிக்கு தயாராகி, அழுதுகொண்டு இருந்தால்.  

நாகேந்திரன்:  என்ன ஆச்சு?

லட்சுமி : என்னோட கால்குலேட்டர காணாம்.  அம்மா நான் தொலைச்சுட்டேன்னு சொல்றாங்க - நான் தொலைக்கால - பையில்தான் வைத்து இருந்தேன் …


நாகேந்திரன்:   சரி சரி வா நல்லதம்பி வீட்டில் ஒரு கால்குலேட்டர் வாங்கிக் கொள்ளலாம் .

  • என்று கிளம்பி இருவரும் நல்லதம்பி வீட்டை அடைந்தார்கள் 


நல்லதம்பி : வா லட்சுமி, நாகேந்திரா … 


லட்சுமி - நல்லதம்பி ஒரு பரீட்சைக்கு ஒரு கால்குலேட்டர எனக்கு தா …  என்னோடத காணாம் …


இதைக்கேட்ட நல்லதம்பி அம்மா தேன்மொழி, “இந்தாம்மா கால்குலேட்டர்.  லட்சுமி, உன்னத கண்டுபிடிச்ச உடன் திருப்பி கொடு”


நாகேந்திரன்: “இவள் எதையுமே பத்திரமா வச்சுக்க மாட்டா … பாருங்க உங்க கால்குலேட்டரயும் தோழிக்க போரா …


நல்லதம்பி : அம்மா நாகேந்திரன் சொல்றமாதிரி அவ நம்மதையும் தொலச்சுட்டா?


நல்லதம்பி அம்மா தேன்மொழி: அப்படி எல்லாம் அவ தொலைக்க மாட்டா - ஏதோ வச்ச எடத்த மறந்துட்டா இல்லன்னா அவ அக்கா யாராவது எடுத்து இருப்பாங்க - சொல் மறந்து இருப்பாங்க.


தேவைப்படரப்ப நாம உதவனும். இதைத்தான் அவ்வையார் ஆத்திசூடியில் “இயல்வது கரவேல்” அப்படின்னு சொல்லி இருக்கார். தேன்மொழி அவனுங்க சொல்றமாதிரி தொலைச்சுராம பத்தரமா வச்சுக்க.


நாகேந்திரன் : நல்லதம்பி இதவிடு. நான் இங்க வந்ததே, நீ ஏதோ மயிலானை வச்சு இறுக்கியா ?


லட்சுமி நாகேந்திரனை பார்த்து கேட்டாள்:

“நேத்து நீ சொன்ன அந்த… மயிலானை… அது என்ன?”

நாகேந்திரன் சிரித்தான். “அது அவன் கற்பனை தான்!”

அப்போதே…

நல்லதம்பியின் அறையில் இருந்த மயிலானை, மெதுவாக பறந்து வந்து அவன் தோளில் உட்கார்ந்தது!

“பார்! இதுதான் மயிலானை!” என்று நல்லதம்பி மகிழ்ச்சியாக காட்டினான்.

ஆனால்…

“எங்கே?” என்று லட்சுமி குழம்பினாள்.

“நல்லதம்பி… ஏதோ விளையாட்டு பண்ணாதே…” என்றான் நாகேந்திரன்.

அந்த நேரம் நல்லதம்பியின் அம்மா வந்தார்.

“என்னடா இது? லட்சுமி சொல்றா… நீ ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கியா?”

“அம்மா… உண்மையா சொல்றேன்…”

“சரி போதும்… மாலைக்கு டாக்டரிடம் போயி கேட்கலாம்… ஏதோ பயந்துட்டான் போல இருக்கான்…” என்றார்.


நல்லதம்பிக்கு உடம்பே நடுங்க ஆரம்பித்தது…

அவன் ஓடிக் கொண்டு அறைக்குள் போனான்.

“மயிலானை… ஏன் யாருக்கும் தெரியல?”

மயிலானை மெதுவாக பேசினது:

“நான் மறைவு ஆற்றல் உடையவன்… என்ன காப்பாத்தியது நீங்களும் பப்புவும்… அதனால உங்களுக்குத்தான் நான் தெரியும்…”

“எனக்கு பயமா இருக்கு… எல்லாரும் என்ன பைத்தியம்னு நினைப்பாங்க…”

“பயப்படாதே நல்லதம்பி…” என்றது மயிலானை.

“நான் இப்போ போகிறேன்… ஆனா உனக்கு எப்போ வேண்டுமானாலும் உதவி வேண்டும்னா…”

“மயிலானை வா! மயிலானை வா!! நல்லதம்பி அழைக்கிறேன் மயிலானை வா!”ன்னு கூப்பிடு… நான் உடனே வருவேன்…”

நல்லதம்பி மெதுவாக தலையசைத்தான்.

அடுத்த நொடி…

மயிலானை அவன் கண் முன்னே பறந்து போனது!

பப்பு மகிழ்ச்சியாக வாலை ஆட்டி அதைப் பார்த்தது…


அடுத்த நாள் — பள்ளியில்

“இன்று விளையாட்டு period இல்ல!” என்று ஆசிரியர் சொன்னார்.

“ஏன் மேடம்?” என்று மாணவர்கள் கேட்டனர்.

“அபி அய்யா இந்தியா போயிருக்காங்க… அவருக்கு பதிலா வரவேண்டிய PET சாருக்கு உடம்பு சரியில்லை…”

மாணவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்தனர்…

ஆனால் நல்லதம்பி மட்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்…

“மயிலானை… உண்மையிலேயே மீண்டும் வருமா?” என்று மனதில் கேட்டுக்கொண்டான்…


“நேற்றைய கதையின் கேள்விக்கான பதில்:”

(அலெக்சாண்டர் ஒரு விருந்தில் கோபத்தில் தனது நெருங்கிய நண்பர் Cleitus the Black-ஐ கொன்றதாக வரலாறு கூறுகிறது.

👉 முடிவு:

  • பிறகு ஆழ்ந்த வருத்தம்

  • நண்பன் திரும்ப வரவில்லை

பாடம்:
கோபத்தில் செய்த செயலை ஆயுள் முழுவதும் சுமக்க வேண்டி வரும்.)

🔍 இந்தக் கதைக்கான கேள்வி (Knowledge based):

Calculator-ல் நாம் கணக்கை சேமித்து வைத்துக்கொள்ள எந்த பொத்தானை (button) பயன்படுத்துவோம்?
(A) ON
(B) AC
(C) M+
(D) =


📘 அடுத்த கதையில் பதில்…

004-1-04-வாய்ப்பை விட்டுவிடாதே!

  004-1-04-வாய்ப்பை விட்டுவிடாதே! அடுத்த நாள் — ஆசிரியர் இல்லாததால் பள்ளியில் ஒரே பேச்சு  சத்தம்… ஏதோ ஒரு அழைப்பிதல் கட்டை எடுத்து வந்த offi...